Homeசெய்திகள்இந்தியா"இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ உறவை வலிமைப்படுத்தவே விருப்பம்"- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி!

“இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ உறவை வலிமைப்படுத்தவே விருப்பம்”- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி!

-

 

இந்தியா மீது கனடா வைக்கும் குற்றச்சாட்டின் பின்னணியில் உளவு தகவல்!
File Photo

இந்தியாவுடன் பிரச்சனையை வளர்க்க விரும்பவில்லை ஆக்கப்பூர்வமான உறவை வலுப்படுத்த விரும்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

“கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது”- நடிகர் ரஜினிகாந்த்!

கனடா நாட்டின் ஓட்டாவா நகரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா உடன் கனடாவின் உறவு மிகவும் சவாலான சூழலைக் கடந்துக் கொண்டிருக்கிறது. இந்தியா உடனான பிரச்சனையை பெரியதாக்க விரும்பவில்லை. ஆக்கப்பூர்வமான உறவை மேம்படுத்தவே கனடா விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ளக கனடா தூதரக அதிகாரிகள் 62 பேரில் 41 பேரை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டுள்ளதாக லண்டனைச் சேர்ந்த இதழில் தகவல் வெளியான நிலையில், கனடா பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது.

தடுப்பைத் தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்!

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிஜ்ஜார் கொலைச் செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்சிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ