அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு .
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வரும் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராகி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்காக அபுதாபி செல்வதற்கு முதல்வர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு இருந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த மனுவை ஆய்வு செய்துள்ளார் . பின்னர் அவர், முதல்வர் கலந்து கொள்ளும் அளவிற்கு அந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல எனச் சொல்லி முதல் பினராகிய விஜயனின் அபுதாபி பயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளார் .
முதல்வருக்கு மத்திய அரசு போட்டுள்ள இந்த தடை கேரளா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.