புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகாவை முதலமைச்சர் ரங்கசாமி திடீரென படித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏவிற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேசுகையில், பல முறை டெல்லி சென்று அலைந்து இறுதியில் அரிசி போடுவதற்கு ஒப்புதல் பெற்றோம். பாஜக அமைச்சர் சாய் சரவணகுமாரிடம் இருந்த துறையை திடீரென மாற்றி விட்டார்கள். இது கூட்டணி ஆட்சி. பாஜகவுக்கு நல்ல பெயர் வாங்கக்கூடாது என்று மாற்றி விட்டனர் என்றார்.
அதற்கு பதில் அளித்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கே.எஸ்.பி.ரமேஷ், ஊழல் நடக்கிறது. குடிமைப்பொருளில் காசு வாங்குகிறார்கள் என ஆர்ப்பாட்டம் நடத்தியது நீங்கள். அரிசி தரும் நேரத்தில் மாற்றிவிட்டனர் என்று சொல்லுவது நியாயம் இல்லை.
விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயங்கர தீ விபத்து… ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
கூட்டணி தர்மத்தை மதிப்பதால் வாய் திறக்கவில்லை. அமைச்சர் துறை மாற்றுவது முதல்வர் அதிகாரம். இதை அவையில் பேசவேண்டியதில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.