Homeசெய்திகள்இந்தியாநிலவின் தரையில் கந்தகம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!

நிலவின் தரையில் கந்தகம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!

-

 

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோ வெளியீடு!
Photo: ISRO

சந்திரயான்- 3 விண்கலத்தில் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் ரோவர் சாதனம், தற்போது நிலவின் தரையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகிறாரா சிம்ரன்?

பிரக்யான் ரோவருடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்ஃபா துகள் அடிப்படையிலான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி கந்தகத்தையும், வேறு சில தனிமங்கள் இருப்பதையும் பிரக்யான் ரோவர் கண்டறிந்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, லேசர் அடிப்படையிலான ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியும், கந்தகம் உள்ளிட்டத் தனிமங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியை பெங்களூரு இஸ்ரோ மையமும், ஆல்ஃபா துகள் அடிப்படையிலான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியை அகமதாபாத் மையமும் உருவாக்கியிருந்தன.

நிலவின் தரையில் கந்தகம் இயல்பாகவே இருந்ததா (அல்லது) எரிமலை வெடிப்பால் வந்ததா (அல்லது) விண்கற்கள் மோதலால் வந்ததா என விஞ்ஞானிகள் விளக்க வேண்டும் என்று இஸ்ரோவின் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஜெயிலரின் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்….. ரஜினிக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!

இதற்கிடையே, பிரக்யான் ரோவர், பாதுகாப்பான பாதையைக் கணித்துச் செல்லும் காட்சியையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விளையாடும் குழந்தையை தாய் பாசத்தோடு பார்க்கும், காட்சியைப் போலவே இது இருப்பதாகவும் இஸ்ரோ வர்ணித்துள்ளது.

MUST READ