Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

-

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி  (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற உள்ள நவம்பர் 10ஆம் தேதி (10/11/2024) விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அவர் (08/11/2024) தனது இறுதி நாள் பணியை மேற்கொண்டுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

இந்திய தலைமை நீதிபதி டாக்டர் நீதிபதி டி ஒய் சந்திரசூட் குறித்த சில வரிகள் …

பிறந்த தினம் : 11-11-1959, புது டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் டெல்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் எல்.எல்.பி. பட்டம் பெற்றவர், அமெரிக்காவின் ஹார்வர்ட் லா ஸ்கூலில் எல்.எல்.எம் பட்டம் மற்றும் ஜூரிடிகல் சயின்ஸில் (SJD) முனைவர் பட்டம் பெற்றார், அமெரிக்காவின் ஓக்லஹோமா பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் வருகைப் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார், மும்பை பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் வருகைப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார், இந்திய உச்ச நீதிமன்றத்திலும், பம்பாய் உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஜூன் 1998 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், நீதிபதியாக நியமிக்கப்படும் வரை 1998 முதல்  இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக வழக்குகளில் ஆஜராகி உள்ளார், .மகாராஷ்டிரா நீதித்துறை அகாடமியின் இயக்குனராகவும் இருந்துள்ளார், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வரை

29 மார்ச் 2000 முதல்  பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்தார், உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 31 அக்டோபர் 2013 முதல் பொறுப்பு வகித்தார், 13 மே 2016 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார், 9 நவம்பர் 2022 இல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார், உச்ச நீதிமன்றத்தில் பதவிக்காலம் :  13-05-2016 முதல் 10-11-2024 வரை. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி  (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற உள்ள நவம்பர் 10ஆம் தேதி (10/11/2024) விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று அவர் (08/11/2024) தனது இறுதி நாள் பணியை மேற்கொண்டுள்ளார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு உயிர் கொடுத்த அண்ணல் அம்பேத்கருக்கு நீதிபதி சந்திரசூட் உச்ச நீதிமன்ற வளாகத்தில் சிலையை நிறுவினார் நீதி தேவதை என்றால் கண்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டிருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து , அந்த தேவதையின் கண்களை மறைத்திருந்த கருப்பு துணியை நீக்கி உச்ச நீதிமன்றத்தில் சிலை நிறுவி கண்களைத் திறந்தார் உச்சநீதிமன்றத்தில் காகிதம் இல்லா வழக்கு விசாரணைக்கு வித்திட்டார் தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டார் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாட்டத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார்

தீர்ப்புகள் : ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என கடந்த ஆண்டு (2023) தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஒரே பாலின உறவை குற்றமற்றதாக்கி தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில்  நீதிபதி சந்திரசூட் இடம்பெற்றிருந்தார் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க முடியாது என தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய முறையில் நிதி விளங்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது  என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி டி ஒய் சந்திரச்சூட் இடம்பெற்றிருந்தார். சபரிமலை தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் ஒருவராக இருந்தார்.அந்த தீர்ப்பு மாதவிடாய் பெண்களுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி மறுக்கப்படும் நடைமுறை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியது. ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

தலைநகர் டெல்லியில் நிலம் ,காவல் ,சட்டம் மற்றும் ஒழுங்கு தவிர பிற சேவைகள் மீது டெல்லி அரசின் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதானி குழும பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான விசாரணையை சிபியிடம் இருந்து சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற முடியாது என தீர்ப்பு வழங்கினார். சிறைகளில் ஜாதி பாகுபாடு காட்டும் விதிமுறைகள் சட்டவிரோதமானது என்றும் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக அத்தகைய சிறை விதிமுறைகளை நீக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கலாம் என தலைமை நீதிபதி டி ஒய் சந்திரச்சூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 1/8/2024 அன்று அதிரடியான தீர்ப்பு வழங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என தலைமை நீதிபதி டி ஒய் சந்திரச்சூட்  தலைமையிலான அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. உத்தரபிரதேச மாநில மதர்சா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும் எனது தீர்ப்பு வழங்கினார் .

கனட பிரதமருக்கு ஆப்பு… அமெரிக்காவை தொடர்ந்து நீளும் எலான் மஸ்கின் அரசியல்

இலகுரக மோட்டார் வாகன உரிமம் வைத்திருப்பவர்கள் 7500 கிலோ வரை எடையுள்ள போக்குவரத்து வாகனங்களை ஓட்ட வழங்கப்பட்ட அனுமதியை உறுதி செய்து நேற்று முன் தினம் (06/11/2024) தீர்ப்பு வழங்கினார். அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே , ” பணிக்கான தகுதி வரைமுறைகளை ” மாற்றி அமைக்க முடியாது என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று (07/11/2024) தீர்ப்பு வழங்கியது

MUST READ