சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்
சண்டிகர் மேயர் தேர்தலில் எட்டு வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்திருந்தார்
. இந்த நிலையில், மேயர் தேர்தலின் போது தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்கு சீட்டுகளை பேனாவால் திருத்தும் காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காணொலியை ஆதாரமாக வைத்து தேர்தல் அதிகாரி மீதும், ஆளும் மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்குத்தாக்கும் சம்பவம். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் நடந்திருக்கிறது என்று தான் நான் இதனை பார்க்கிறேன். தேர்தல் அதிகாரி வெளிப்படையாக தில்லுமுல்லு செய்தது தெரிகிறது என கூறிய நீதிபதி, சண்டிகர் மேயர் கூட்டத்தை கூட்ட தடை விதித்தார். மேலும் தேர்தல் நடத்திய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.