Homeசெய்திகள்இந்தியாநடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சுரேஷ் கோபி செயலுக்கு கடும் எதிர்ப்பு!

நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சுரேஷ் கோபி செயலுக்கு கடும் எதிர்ப்பு!

-

 

நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சுரேஷ் கோபி செயலுக்கு கடும் எதிர்ப்பு!
File Photo

கேரளாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரிடம், அத்துமீறிய நடிகரும், பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் கோபி மீது புகார் எழுந்துள்ளது. தமது செயலில் தவறான நோக்கம் இல்லை என்றும், எனினும் மன்னிப்புக் கேட்பதாகவும் நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

“ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணமா?”- புகார் எண்கள் அறிவிப்பு!

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் நடிகர் சுரேஷ் கோபி செய்தியாளர்களைச் சந்தித்த போது, பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் தோல் மீது கை வைத்தபடி, பேசத் தொடங்கினார்.

இதனால் அந்த பெண் விலகிய போதும், மீண்டும் பிடித்து இழுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சுரேஷ் கோபியின் செயலுக்கு கேரளா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தமது செயலுக்கு சுரேஷ் கோபி மன்னிப்புக் கோரியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, அந்த பெண் பத்திரிகையாளரிடம் மிகவும் அக்கறையுடன் நடந்துக் கொண்டதாகவும், வாழ்நாளில் பொது இடத்தில் தாம் தவறாக நடந்துக் கொண்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“தேவர் நினைவிடத்தில் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும், பெண் பத்திரிகையாளரின் உணர்வை மதிப்பதாக குறிப்பிட்ட சுரேஷ் கோபி, மன்னிப்புக் கேட்பதாகவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MUST READ