Homeசெய்திகள்இந்தியாசுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி

-

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: டெல்லியில் நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி, விபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளது என பகிரங்க குற்றச்சாட்டினார்.

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி

மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் விபவ் குமார் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே விபவ் குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள ஹசாரி நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணைக்கு தாக்குதலுக்கு உள்ளான சுவாதி மாலிவால் நேரில் ஆஜராகி இருந்தார். விவப் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.

அப்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் மே 13 ஆம் தேதி எவ்வித முன் அனுமதியும் இன்றி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சுவாதி மாலிவால் வந்ததாகவும், அப்போது அங்கு விபவ் குமார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு வந்த சுவாதி மலிவால் காத்திருப்பு அறையில் அமர்ந்து கொண்டார்.

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி

மாநிலங்களவை உறுப்பினர் என்பதற்காக எந்த ஒரு முன் அனுமதியும் இல்லாமல் பலத்த பாதுகாப்பு உள்ள முதலமைச்சர் இல்லத்திற்குள் நுழைந்து முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என பலமுறை கூச்சலிட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த போது ஒவ்வொரு முறையும் விபவ் குமார் எங்கே? அவரை வர சொல்லுங்கள் என சுவாதி மாலிவால் கூறியதாக விபவ் குமார் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

மேலும் தாக்குதல் நடத்திய அளவிற்கான காயங்கள் இல்லை என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. சுவாதி மாலிவாலுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் அவராகவே அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

https://www.apcnewstamil.com/news/india/extension-of-interim-bail-by-7-days-arvind-kejriwal-requests-court/87724

விபவ்குமார் வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்துக் கொண்டிருந்த போதே நீதிமன்ற அறையில் அமர்ந்திருந்த ஸ்வாதி மாலிவால் கதறி அழுதுள்ளார். பின்னர் சுவாதி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு பேசியபோது, தன்னை ஒரு ஏஜென்ட் போல பலர் சித்தரிப்பதாகவும் விபவ் குமார் வெளியில் ஜாமினில் வந்தால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளது என பகிரங்கமாக தெரிவித்தார்.

குறிப்பாக டெல்லியில் உள்ள பல அமைச்சர்கள் விபவ் குமாருக்கு ஆதரவாக உள்ளதாகவும் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பெரும் அச்சுறுத்தல் இருக்கும் எனவும் நீதிபதி முன்பு தெரிவித்துள்ளார்.

MUST READ