முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த ஆளுநரின் விமர்சனத்திற்கு விளக்கமளித்துள்ள தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “துணைவேந்தர்கள் மாநாட்டை தன் அரசியலுக்காக ஆளுநர் பயன்படுத்தியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறிப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடந்திருப்பது வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
போராட்டத்தில் இருந்து விலகலா?- சாக்ஷி மாலிக் விளக்கம்!
தமிழகத்தின் கல்வி நிலைப் பற்றி ஆளுநர் கூறிய கருத்துகள் தவறானவை. இந்தியாவின் தலைச்சிறந்த 100 கல்லூரிகளில் 30 தமிழகத்தில் உள்ளன. கல்வியில் சிறந்தது தமிழகம் என்பதை ஆளுநர் அறிந்தும் அறியாமல் பேசுகிறார். தமிழகத்தின் கல்வி சிறப்பு குறித்த வரலாறைத் தெரியாமல் ஆளுநர் பேசியுள்ளார். பொருளாதார ரீதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கூட அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதைப் பார்த்து ஆளுநர் விமர்சிக்கிறாரா? பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, வெளிநாடுகளுக்கு முதலீடுகளுக்காக சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது ஏன் என ஆளுநரைப் பார்த்து பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்ப வேண்டும்.
தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது வழக்கம்தான். ஆளுநர் பதவியில் இருந்துக் கொண்டு உண்மைக்கு மாறான தகவலைக் கூறி அரசியலில் ஈடுபடக் கூடாது. ஆளுநர் அரசியல் செய்வதாக இருந்தால் அதற்கு ராஜ்பவனைப் பயன்படுத்தக் கூடாது. ஆளுநர் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்போம்; அவர் மீது வழக்குத் தொடர வேண்டியதில்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.