Homeசெய்திகள்இந்தியாகாவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!

காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!

-

- Advertisement -
kadalkanni

 

காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!
File Photo

காவிரி விவகாரம் தொடர்பாக, மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சின் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 12 பேர் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசியது.

கூட்டணி குறித்து அ.தி.மு.க. அறிவிப்பு- தீவிர ஆலோசனையில் அண்ணாமலை!

தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீ சார்பில் நவாஸ் கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவை நேரில் சந்தித்தனர்.

“தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு இல்லை”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடனான சந்திப்பின் போது, காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு அனுப்பிய கடிதத்தில் தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக தமிழக குழு சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை விரைந்து வழங்க, கர்நாடகா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ