Homeசெய்திகள்இந்தியாநிதிப்பற்றாக்குறை 4.9% - 4.5% ஆக குறைக்க இலக்கு - நிர்மலா சீதாராமன்

நிதிப்பற்றாக்குறை 4.9% – 4.5% ஆக குறைக்க இலக்கு – நிர்மலா சீதாராமன்

-

2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% லிருந்து 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதிப்பற்றாக்குறை 4.9% - 4.5% ஆக குறைக்க இலக்கு - நிர்மலா சீதாராமன்

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹ 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு, மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி, ஆந்திர மாநில வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி, பீகார் மாநில வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல – பீகார், ஆந்திராவிற்கான பட்ஜெட்

5 ஆண்டுகளுக்கு, நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ₹2.2 லட்சம் கோடி நிதி, நாட்டின் விண்வெளி சாந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.1000 கோடி, அசாம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2024 – 25ம் நிதியாண்டிக்கான மூலதன செலவினத்திற்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 – 25ம் நிதியாண்டிக்கான கடன் அல்லாத மொத்த வரவுகல் ரூ.2.07 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மொத்த செலவு ரூ.48.21 லட்சம் கோடியாகவும், நிகர வரி ரூ.25.83 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக குறையும். 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

MUST READ