- Advertisement -
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலகுறைவு காரணமாக கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து, நேற்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பை ஒர்லி பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரத்தன் டாடா வகித்து வந்த டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக அவரது ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இன்று நடைபெற்ற டாடா அறக்கட்டளை குழுவின்
கூட்டத்தில் நோயல் டாடா ஒருமனதாக தேர்வாகியுள்ளார். முன்னதாக நோயல் டாடா,
டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட் அமைப்பின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.