மத்திய அரசு வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூபாய் 5,797 கோடியை ஒதுக்கியுள்ளது.
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிகப்பு இயந்திரத்தில் எலி – பொதுமக்கள் அதிர்ச்சி
பல்வேறு மாநிலங்களுக்கான வரி பகிர்வுத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ளது. மொத்தம் ரூபாய் 1,42,122 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திற்கு ரூபாய் 5,797 கோடி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூபாய் 25,495 வழங்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்களுக்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி அன்று ரூபாய் 72,961 கோடி விடுவிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த தொகை ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதோடு சேர்த்து கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று தவணைகளாக மாநிலங்களுக்கு வரி பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பரிசு
மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு குறைவாகவே வழங்கப்படுவதாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.