Homeசெய்திகள்இந்தியாஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கிய டெக் வல்லுநர் - ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க முடிவு

ஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கிய டெக் வல்லுநர் – ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க முடிவு

-

 

டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ‘ஜியோ ஹாட்ஸ்டாரின்’ டொமைனை வாங்கி  இருக்கிறார். அதனை நல்ல விலைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளங்கள் இணைவது இந்திய அளவில் பயனர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ என பொதுவான பெயரில் அறியப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தாதாரர்கள் அடிப்படையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ டொமைன் நேமினை வாங்கியுள்ளார். அது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

“நான் டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர். 2023-ன் தொடக்கத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இந்தியாவில் தனது பயனர்களை இழந்து வருவதாக செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன். அதனால் இந்தியாவில் இயங்கும் வேறொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்பட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முடிவு என்றும் அறிந்தேன். அந்த வகையில் இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் யாருடன் இணைய வாய்ப்புள்ளது என ஆராய்ந்தேன்.

ரிலையன்ஸ் நிறுவனம் அதனை வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாக அறிந்து, ஜியோஹாட்ஸ்டார்.காம் டொமைன் நேம் குறித்து தேடினேன். அந்த டொமைன் எனக்கு கிடைத்தது. தற்போது இந்த இரண்டு தளங்களும் இணைந்துள்ளன. ஜியோ ஹாட்ஸ்டார் என இது அறியப்படுவது இரண்டு தளங்களும் பலன் அளிக்கும். அது என்னிடம் தான் உள்ளது. இந்த டொமைன் நேம் தேவைப்படுகின்ற ரிலையன்ஸ் நிறுவனம் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். நான் அதனை விற்பனை செய்ய தயார். இதில் கிடைக்கும் தொகை மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நான் படிக்க உள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

MUST READ