
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, டெல் அவிவ் நகருக்கு வரும் நவம்பர் 02- ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!
கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி போர் தொடங்கிய நாள் முதல் ஏர் இந்தியா விமானங்கள் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படவில்லை. இந்த சூழலில் போர் தொடர்ந்து நீடித்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக டெல் அவிவ் நகருக்கு விமானங்கள் இயக்கப்படாது எனவும், இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் படையினர் இடையேயான போரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வரும் நாட்களில் விமானங்கள் இயக்கப்படுவது தொடர்பாக, அறிவிப்பு வெளியாகும் என்றும் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
இதற்கிடையே, மத்திய அரசின் அஜய் திட்டத்திற்காக, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டன.