தெலங்கானா மாநிலம், அம்பட்பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா மாநில பெண்களுக்கு மாதம் சுமார் 4,000 ரூபாய் மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படும் .பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2,500 ரொக்கம், ரூபாய் 500 சிலிண்டர் மானியம், ரூபாய் 1,000 இலவசப் பேருந்து பயணம் என மாதந்தோறும் 4,000 ரூபாய் மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படும்.
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலின் அடையாளமாகவும், மையமாகவும் விளங்குகின்றன. கே.சி.ஆர்.-ன் குடும்ப அரசுத் திருடிய ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு பைசாவையும் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு திருப்பிக் கொடுக்கும்.
வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூபாய் 2,500, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தெலங்கானா மாநிலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.