Homeசெய்திகள்இந்தியாஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

-

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் வாரங்களில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Accident

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வர்த்தனப்பேட்டை எம்.டி. இல்லந்தா கிராமம் வழியாக செல்லும் வாரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் ஆட்டோ டிரைவருடன் 4 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த மேலும் மூன்று பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் தேன் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் என போலீசார் விசாரனையில் தெரிய வந்துள்ளது.

குடிபோதையில் லாரி டிரைவர் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த விபத்திற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில் அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

MUST READ