Homeசெய்திகள்இந்தியாஅமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல்

-

அமெரிக்க அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு  அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல் தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த  புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தீவிர ரசிகர் ஆவார். டிரம்ப்பிற்கு இந்தியா, தெலங்கானா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் மீதுள்ள அன்பால் கிருஷ்ணா 2019 ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக இருந்தபோது தனது வீட்டிலேயே அவருக்கு கோயில் கட்டி வழிப்பட்டார். இந்நிலையில் 2020 ஆண்டு கிருஷ்ணா உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில்  டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால்  கிராம மக்கள் அனைவரும்  சேர்ந்து கிருஷ்ணா வீட்டில் உள்ள டொனால்ட் டிரம்ப் சிலைக்கு  பால் அபிஷேகம்  செய்து மலர் மாலை அணிவித்து  கொண்டாடி அவருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வழங்க வேண்டி கொண்டார். கிருஷ்ணா டொனால்ட் டிரம்ப் மீது கொண்ட அன்பால் அவருக்கு சிலை அமைத்தார். அவரது  நினைவு மற்றும் பக்தியை போற்றும் வகையில் கிராம மக்கள்  சேர்ந்து டிரம்ப்  வெற்றியை கொண்டாடியதாக கிராம மக்கள் கூறினர்.

முகேஷ் அம்பானியின் அதிரடி வீழ்ச்சி: ₹42,18,63,25,00,000 வீழ்ச்சி

 

 

MUST READ