நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதற்காக நாடாளுமன்றத்தை வரும் ஜனவரி 31ஆம் தேதி கூட்ட மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத்தலைவர் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை ஆற்றுவார். மறுநாள் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வங்கி, நிதித்துறை சார்ந்த நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிப்ரவரி ஒன்றாம் தேதி சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் ஆவதால் அன்று வழக்கம்போல் இந்திய பங்கு சந்தைகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.