உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில் காட்டு பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. அக்குழந்தையின் தாய் அஸ்மா, 15 நாட்களுக்கு முன்பு கவுத்ரா பட்டி பௌனி கிராமத்தில், அல்ஷிஃபா மற்றும் ரிஹான் என பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
வீட்டில் தினமும் பூனை ஒன்று காணப்பட்டதாகவும் அதை குடும்பத்தினர் விரட்டி வந்ததாகவும் அஸ்மாவின் கணவர் தெரிவித்தார்.
நேற்றிரவு அஸ்மாவுடன் ரிஹான் தூங்கிக் கொண்டு இருந்தான்.திடீரென வந்த பூனை குழந்தை ரிஹானை கவ்விக் கொண்டு ஓடியது.இதை பார்த்த தாய் கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு அஸ்மாவின் கணவர் ஓடிவந்து பூனையினை பிடிக்க துரத்திக் கொண்டு ஓடும் போது பூனையானது வீட்டின் கூறை மேல் ஏறியது.பயந்து போன பூனை குழந்தையை கீழே போட்டு விட்டு ஓடியது.கீழே விழுந்த குழந்தைக்கு அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.