பெங்களூரு நகரில் பெங்களூரு நகர கூட்டுறவு வங்கியில் 2016-ம் ஆண்டு 50 லட்சம் கடன் வாங்கிய சாயிஸ்தா பானு (48) மற்றும் முகமது முனாய்த் உல்லா தம்பதியினர் இதுவரை 95 லட்சம் வரை கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மேற்கொண்ட தம்பதியினர் கூட்டுறவு வங்கியில் கடனை பெற்று தங்களது விவசாய நிலத்தில் இஞ்சி சாகுபடி செய்துள்ளனர். இஞ்சி சாகுபடி செய்தபோது சரியான விலை கிடைக்காததால் கடுமையான இழப்பு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது கடனை அடைக்க வட்டியில் நிவாரணம் வழங்க கோரி குடும்ப உறுப்பினர்கள் வீட்டு வசதி வாரிய அமைச்சர் ஜமீரை அணுகி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான இவர்களது வீட்டை தற்போது வங்கி அதிகாரிகள் 1.41 கோடி ரூபாய்க்கு ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த குடும்ப உறுப்பினர்கள் மண்ணெண்ணெய்யுடன் விதான் சவுதா முன் தற்கொலைக்கு முயன்றனர். மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவர்களை போலீஸார் தலையிட்டு தடுத்து நிறுத்தி சட்டமன்ற வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற குடும்ப உறுப்பினர்கள் மீது IPC பிரிவு 309 இன் கீழ் தற்கொலை முயற்சி செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.