Homeசெய்திகள்இந்தியாஜம்மு - காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு – காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

-

ஜம்மு – காஷ்மீரில் 24 சட்டமன்ற தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

ஜம்மு – காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், 2018-ல் கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் 18-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ஜம்மு காஷ்மிரில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் மொத்தம் 23 லட்சத்து 27 ஆயிரத்து 580 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை முதலே வாக்குச் சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

MUST READ