Homeசெய்திகள்இந்தியாதிருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம்... மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது...

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம்… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

-

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி மீது, திருச்சூர் பூரம் விழாவுக்கு ஆம்புலன்சில் சென்றதாக புகார் எழுந்தது. முதலில் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்திருந்த சுரேஷ் கோபி, பின்னர் தமது காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஆம்புலன்சில் சென்றதாக விளக்கம் அளித்தார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுமேஷ், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக திருச்சூர் கிழக்கு காவல்துறையினர் தற்போது மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான அந்த புகாரில் அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவும், அமைச்சர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் திருச்சூர் பூரம் நிகழ்வின்போது நடிகர் சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாகப் பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி சுரேஷ் கோபி வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ