Homeசெய்திகள்இந்தியா'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து!

-

- Advertisement -

 

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து!
Photo: ANI

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 10- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், ஜனதா தள கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய படத்தில் கவினுக்கு ஜோடியாகும் ‘அயோத்தி’ பட நடிகை!

கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் இன்று (மே 05) மதியம் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருந்த நமது நாட்டு குடிமக்களை ‘ஆபரேஷன் காவிரி’ என்ற திட்டத்தின் மூலம் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தாய் நாட்டிற்கு அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளோம்” என்றார்.

மேகமலை வனத்திற்குள் நுழைந்தது அரிசிக்கொம்பன் யானை!

அதைத் தொடர்ந்து, ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள சமூகத்தை தீவிரவாதம் எப்படி சிதைக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த படத்தைத் தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தைப் பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ