மேற்கு வங்க மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!
மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு தடை விதித்த அந்த மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக, படத்தின் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று (மே 18) விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, ‘தி கேரளா ஸ்டோரி’ மேற்கு வங்க அரசு விதித்தத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.
இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!
மேலும், தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடைச் செய்யக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.