
புதுச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை வளையத்தில் ஜெகத்ரட்சகன்……விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி அதிரடி!
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திர பிரியங்காவும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, வீட்டு வசதி, வேலை வாய்ப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிருப்தியில் இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமுருகன், சட்டமன்றக் கூட்டம், கட்சி நிகழ்வுகளைப் புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில், திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பாட்டி சொல்லைத் தட்டாத நடிகர் விஷால்!
இதனிடையே, அப்பா பைத்திய சாமி கோயிலில், முதலமைச்சர் ரங்கசாமியுடன் திருமுருகன் தரிசனம் செய்திருக்கிறார்.