தெலுங்கானாவில் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் தோண்டிய போது விபத்து. மூன்று தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகர் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக பூமி செய்து தரைத்தளத்திற்கு கீழ் செல்லர் பகுதி அமைப்பதற்காக ஆழமாக தோண்டப்பட்டது.
அப்போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து மரணம் அடைந்தனர்.அவர்களை மீட்க சக தொழிலாளர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களை காப்பாற்ற முடியாததால் மண்ணில் புதைந்து இறந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர்.
மண்ணில் புதைந்து இறந்து போன மூன்று தொழிலாளர்களும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.