Homeசெய்திகள்இந்தியாரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கி

ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கி

-

- Advertisement -

ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கி

ரூ.2000 நோட்டுகளை அக்டோபர் 7 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!

கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே மாதம் முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதாவது, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்தது. பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாக 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரூ.2000 நோட்டுகளை அக்டோபர் 7 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ 2000 நோட்டுகளை மாற்ற இன்றுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

 

MUST READ