Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

-

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு செய்து  பக்தர்கள்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 1.25 மணி நேரத்தில் முன்பதிவு செய்தனர். அங்க பிரதட்சனம் டிக்கெட்கள் 2.30 நிமிடங்களில் மொத்த டிக்கெட்டும் பதிவு செய்து கொண்டனர்.

கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்

மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 .11 நிமிடங்களில் பதிவு செய்து கொண்டனர். ₹ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் 2 .06 மணி நேரத்தில் முன்பதிவு செய்து கொண்டனர். திருப்பதி , திருமலையில் உள்ள ஓய்வறைகள் 1.40 மணி நேரத்தில் பக்தர்கள் பதிவு செய்து கொண்டனர். தேவஸ்தானம் வெளியிடும் டிக்கெட் மற்றும் அறைகள் ஆயிரகணக்கில் இருந்தாலும் அதனை பெற 2 லட்சம் பக்தர்கள் வரை முயற்சி செய்வதால் பல பக்தர்களுக்கு பணம் செலுத்தும் கேட்வே வரை சென்று கிடைக்காமல் பலர் ஏமாற்றும் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பல பக்தர்கள் நெட்வொர்க் பிரச்சனையாலும் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தேவஸ்தான அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டதற்கு ஜீயோ கிளவுட் சர்வர் மூலம் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறது எனவும் யாருடய சர்வர் விரைவாகவும், அடுத்தடுத்து வேகமாக செயல்படுகிறதோ அவர்களுக்கு கிடைக்கிறது. சர்வர் பிரச்சனை பணம் செலுத்துவதில் காலதாமதம் ஆனால் அடுத்து யாருடயது உள்ளதோ அவர்களுக்கு பதிவாகிவிடும். இதில் யாருடைய தலையீடும் இல்லாமல் வெளிப்படையாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

MUST READ