Homeசெய்திகள்இந்தியாஇன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

-

- Advertisement -

இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைக்கு இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ள நிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
School Leave

கர்நாடகாவில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தற்போது மழையின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் ஆன தட்சிண கனடா, உடுப்பி, காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களான சிக்கமகளூர், குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தட்சிண கனடா மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வெள்ள நீரில் மிதந்து வருகிறது.

மழை காரணமாக உள்ளால் மற்றும் கார்வார் பகுதியில் இரண்டு பேர் கால்வாயை கடக்க முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தட்சிண கனடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் உடுப்பி சிக்கமகளூர் குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காவிரி நீர் பிடிப்பு

மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை காரணமாக மரங்கள் முடிந்து போக்குவரத்து மற்றும் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளை முடக்கி விட்டுள்ள மாவட்ட நிர்வாகம் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிர்படுத்தி உள்ளது.

மங்களூரு நகரில் தாழ்வான பகுதிகளில் கல்லணை புகுந்ததால் நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக கபினி, கே ஆர் எஸ், ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வரும் காரணமாக நேற்று கபினி அணைக்கு நீர் வரத்து 3,400 கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்தின் அளவு 10,700 கன அடியாக அதிகரித்துள்ளது.

MUST READ