தமிழத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில், 24- ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 4நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மேலும் அடுத்த 2நாட்கள் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.