Homeசெய்திகள்இந்தியா"ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்"- கவுதம் அதானி...

“ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்”- கவுதம் அதானி அறிவிப்பு!

-

 

"ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்"- கவுதம் அதானி அறிவிப்பு!
File Photo

ஒடிஷா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்ளும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!

ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 700- க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் சார்பிலும், பிரதமர் சார்பிலும், மாநில அரசுகள் சார்பிலும் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஒடிஷாவில் ஏற்பட்ட ரயில் விபத்தினால், மிகுந்த துயருற்று உள்ளதாகவும், இந்த விபத்தில் பெற்றோரை இழந்துள்ள ஏதுமறியா குழந்தைகளின் பள்ளிக் கல்வி செலவை ஏற்றுக் கொள்ள அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

ரயில் விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பதும், குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தருவதும் நமது அனைவரின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ