வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்! கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சாம்ப்ரே விமான நிலையத்தில் இருந்து தனியார் பயிற்சி விமானம், இன்று காலை ஒரு விமானி மற்றும் ஒரு பயிற்சி விமானியுடன் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து பெலகாவி மாவட்டம் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். அவசரமாக தரையிறங்கும் போது விமானத்தில் இருந்த இருவர் லேசான காயம் அடைந்தனர். உடனடியாக காயமடைந்த விமானிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் விமானப்படை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து வருகிறது. விமானம் திறந்தவெளி நிலத்தில் தரை இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.