Homeசெய்திகள்இந்தியாரயில்களில் ஏ.சி. இருக்கை வகுப்புக்கான கட்டணத்தைக் குறைத்து ரயில்வே வாரியம் அதிரடி!

ரயில்களில் ஏ.சி. இருக்கை வகுப்புக்கான கட்டணத்தைக் குறைத்து ரயில்வே வாரியம் அதிரடி!

-

 

டேராடூன்- டெல்லி இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
File Photo

‘வந்தே பாரத்’ உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், கட்டணங்களை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சகத்துடனும் அதிகாரிகள், ரயில் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ரயில் கட்டணத்தைக் குறைக்க மத்திய ரயில்வேத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.. கிராம மக்கள் ஆர்வத்தோடு பார்த்து வழிபட்டனர்…..

அதன் தொடர்ச்சியாக, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏ.சி. சேர் கார் கட்டணம் 25% வரைக் குறைக்கப்படும். அதேபோல், பயணிகளின் பயன்பாடு 50%- க்கும் குறைவாக உள்ள ரயில்களில் ஏ.சி. சேர் கார் கட்டணம் குறைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் செய்த அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் தடுப்பு பிரிவு- ஈபிஎஸ் விமர்சனம்

இது தொடர்பாக, ரயில்வே வாரியம் எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு கட்டணம் குறைப்பு என்பது தொடர்பான பட்டியலை அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அனுப்பி உள்ளது. அதன்படி, கடந்த 30 நாட்களில் 50%- க்கும் குறைவாக நிரம்பிய ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ