மத்திய பிரதேசத்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் தொழிலாளி ஒருவர் ரயிலுக்கு அடியில் 290 கிலோ மீட்டர் தொங்கியபடி பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இடார்ச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஜபல்பூர் செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் தொழிலாளி ஒருவர், சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் ரயிலில் இரு பெட்டிகளுக்கு நடுவே உள்ள சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் நின்றபோது, கேரேஜ் மற்றும் வேகன் துறை ஊழியர்கள் ரோலிங் சோதனை நடத்தினர். அப்போது, ரயிலின் S4 கோச்சின் கீழ் அந்த தொழிலாளி ஆபத்தான முறையில் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து, ஊழியர்கள் அவரை ரயிலில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து, அவர் மீது ஆர்பிஎஃப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தொழிலாளி ரயிலுக்கு அடியில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.