Homeசெய்திகள்இந்தியாசிக்கலில் 'வரி மன்னன்...' டிரம்ப் திட்டவட்ட முடிவு… இந்தியா இழக்கப்போகும் ரூ 61 ஆயிரம் கோடி..!

சிக்கலில் ‘வரி மன்னன்…’ டிரம்ப் திட்டவட்ட முடிவு… இந்தியா இழக்கப்போகும் ரூ 61 ஆயிரம் கோடி..!

-

- Advertisement -

இந்தியா, சீனா போன்ற நாடுகள் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கும் அதே வரிகள் மீது விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இதில் விஷேசம் என்னவென்றால், டிரம்ப் ஏற்கனவே இந்தியாவை ‘வரிவிதிப்பு ராஜா’என்று அழைத்து வருகிறார். இந்தியாவின் வரிகளை உலகளாவிய தளங்களில் டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்திலும் இந்த வரிவிதிப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இப்போது அவர் தனது கருத்துக்கு அழுத்தம் சேர்த்து நடவடிக்கைக்கு தயாராகி விட்டார். கட்டணத்தைப் பொறுத்தவரை எந்த சலுகையும் அளிக்க அவர்கள் தயாராக இல்லை.

வெள்ளிக்கிழமை, உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் தலைவரான டொனால்ட் டிரம்ப், ”மற்ற நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிப்பது போன்ற அதே வரிகளை இப்போது அமெரிக்காவும் விதிக்கும். விரைவில் பரஸ்பர கட்டணத்தை அறிவிப்பேன்.வரிகள் தொடர்பாக எந்த சலுகைகளும் வழங்கப்படாது. மற்ற நாடுகள் அவர்கள் மீது விதிக்கும் அதே வரியை நாங்களும் அவர்கள் மீது விதிப்போம். நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம். இந்தியாவும், சீனாவும் தங்கள் பொருட்களுக்கு வரிகளை விதிப்பது போல, அந்த நாடுகளின் பொருட்களுக்கும் இதே போன்ற வரிகள் விதிக்கப்படும். அமெரிக்கா இதை ஒருபோதும் செய்ததில்லை. கோவிட் வருவதற்கு முன்பும் அதையே செய்ய விரும்பினோம் ”என்று அவர் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் கட்டணக் கொள்கையை பலமுறை விமர்சித்துள்ளார். இந்தியாவில் அதிக வரிகள் விதிக்கப்படுகின்றன என்று அவர் பல்வேறு தளங்களில் இருந்து பலமுறை கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

அதனால்தான் அவர் இந்தியாவை ‘வரிகளின் ராஜா’ என்று அழைக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை. எலான் மஸ்க், பிரதமர் மோடி இடையேயான சந்திப்பில், எலான் மஸ்க் இந்தியாவில் வணிகம் செய்ய விரும்புவதாகக் கூறினார். ஆனால் இந்தியாவில் வேலை செய்வதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை அதன் அதிக கட்டணம். இந்தியாவில் தொழில் செய்வது மிகவும் கடினமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

டிரம்ப், ஹார்லி டேவிட்சனை உதாரணமாகக் கூறினார். இது இந்தியாவில் கடுமையான வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ”அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு மண்ணில் உற்பத்தி ஆலைகளை அமைக்க நிர்பந்திக்கப்படுகிறது. இதைச் செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா அவ்வாறு செய்ய மறுத்தால், இந்தியா அதன் மீது கடுமையான வரிகளை விதிக்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவை விட சில சிறிய நாடுகள் குறைந்த அளவே வரி விதிக்கின்றன.அதிக வரி காரணமாக, ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் பைக்குகளை விற்க முடியவில்லை. அதன் காரணமாக அந்த நிறுவனம் அங்கு ஒரு உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டியிருந்தது” என டிரம்ப் கூறினார்.

இந்தியா மீதும் பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறுவதால், நிச்சயம் இந்தியா இழப்பை சந்திக்க நேரிடும். இந்தியாவின் ஏற்றுமதித் துறைகள் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர்கள் வரை அதாவது சுமார் 61 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிடும். சிட்டி ரிசர்ச் அறிக்கையின்படி, இந்த பரஸ்பர கட்டணத்தால், இந்தியாவின் ரசாயனங்கள், உலோகப் பொருட்கள் மற்றும் நகைகளைத் தவிர, ஆட்டோமொபைல், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் அதிக இழப்பைச் சந்திக்கக்கூடும்.

மிக மோசமான சூழ்நிலையில், அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் 10 சதவீத சீரான வரியை விதித்தால், இந்தியப் பொருளாதாரம் 50 முதல் 60 அடிப்படைப் புள்ளிகள் வரை இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

MUST READ