Homeசெய்திகள்இந்தியாசுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

-

 

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!
Photo: ANI

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த நவம்பர் 12- ஆம் தேதி ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி மீட்டனர். மகிழ்ச்சி பொங்க வெளியே வந்த தொழிலாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இயக்குநர் சந்தீப் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தான் அனிமல் படம் – ரன்பீர் கபூர்

சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களின் 490 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. சுரங்கத்தில் மண் சரிந்து சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக இடையறாது கடந்து வந்தது.

மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதில் மகிழ்ச்சி. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்து, மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைகிறேன்; மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்; மீட்புப் பணியில் உதவிய தொழிலாளர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்டது உணர்ச்சிப்பூர்வமானது; தொழிலாளர்களின் மன உறுதியும், வலிமையுமே ஊக்கமளித்ததாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும், தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

தடைகளை தாண்டி துருவநட்சத்திரம் படத்தை திரைக்கு கொண்டு வர போராட்டம் – கௌதம் மேனன் உருக்கம்

இதனிடையே, சுரங்க விபத்து மீட்புப் பணிகள் தொடர்பாக, மாநில முதலமைச்சரிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

MUST READ