Homeசெய்திகள்இந்தியா"கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!

“கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!

-

 

"புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
Photo: Union Minister Nirmala Sitaraman

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வினரால் இழிவுப்படுத்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த நிலையில், அந்த சமபவம் தொடர்பான நாளிதழ் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வினரால் மானபங்கம் செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த சமபவம் தொடர்பான நாளிதழ் செய்திகளை வெளியிட்டு மீண்டும், அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989- ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் ஆடைகளைக் கிழித்து, தி.மு.க.வினர் மானபங்கம் செய்ததாகக் குற்றம்சாட்டினார்.

ஆனால் இந்த புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் திட்டவட்டமாக மறுத்தனர். வாட்ஸ் அப் செய்திகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதாகவும், சம்பவத்தின் போது அவர் வெளிநாட்டில் இருந்ததாகவும் தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், 1989- ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் தொடர்பாக, நாளிதழ்களில் வந்த செய்திகளை நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!

அதில், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை பற்றி நான் மக்களவையில் பேசியதை விமர்சித்து, அப்போது வெளிநாட்டில் இருந்த இவர், நடக்காத சம்பவம் நடந்ததாக எப்படி கூறுகிறார் என்று கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ