Homeசெய்திகள்இந்தியாபாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை - சந்திரபாபு நாயுடு

பாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை – சந்திரபாபு நாயுடு

-

பாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை - சந்திரபாபு நாயுடு

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி நிதியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.

செங்கல்பட்டு அருகே பெற்றோர் ரப்பர் வாங்கி தராத காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

ஜூன் 25 ஆம் தேதி குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அங்கு நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசியபோது ”பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டப்படும் என அறிவித்துள்ளார். அதாவது பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி மற்றும் யாதவப் பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும். குப்பம் ரயில் நிலையத்தை பெங்களூரு, சென்னை செல்வதற்கான முக்கிய சந்திப்பாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ”ஊருக்கே தண்ணீர் தருவது என் பொறுப்பு; அதை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு” என்றார்.

MUST READ