Homeசெய்திகள்இந்தியாயுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு

யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு

-

சிஎஸ்ஐஆர் நெட் மற்றும் யுஜிசி நெட் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகள்: சிஎஸ்ஐஆர் நெட் (CSIR – NET) தேர்வு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது, அதே யுஜிசி நெட்(UGC – NET) தேர்வு வர்த்தகம் , மனிதநேயம் போன்ற பல்கலைத் துறை விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது.

யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு

கடந்த ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வெளியானதை அடுத்து அதற்கு மறுநாள்  மத்திய கல்வி அமைச்சகமும், மத்திய அரசும் இணைந்து இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை ரத்து செய்தது.

https://www.apcnewstamil.com/news/india/six-injured-in-school-bus-accident/96490

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு நாடு முழுவதும் இரண்டு ஷிப்ட்களாக ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாக நடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றுள்ளது.யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்புஇந்நிலையில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது அதே  சிஎஸ்ஐஆர் நெட் (CSIR – NET) தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ