Homeசெய்திகள்இந்தியாபுதிய சட்ட வரம்பிற்குள் வராத யுஜிசி-நெட் 2024 தேர்வு முறைகேடு!

புதிய சட்ட வரம்பிற்குள் வராத யுஜிசி-நெட் 2024 தேர்வு முறைகேடு!

-

மிக்ஜம் புயல் எதிரொலி...டிசம்பர் 9 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு..... அண்ணா பல்கலைக்கழகம்!

2024 பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட வரம்பிற்குள் யுஜிசி-நெட் 2024 தேர்வு கொண்டு வரப்படததால், அதில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானோர் இந்த சட்டத்தின்கீழ் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய தேசிய தேர்வு முகமை நடத்தும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான ஜூன் பருவத்திற்கான தேர்வு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்டது. 317 நகரங்களில் 1205 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 9 லட்சத்து 08 ஆயிரத்து 580 பேர் எழுதினர். இந்த நிலையில், நெட் தேர்வி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இந்த நிலையில், 2024 பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட வரம்பிற்குள் யுஜிசி-நெட் 2024 தேர்வு கொண்டு வரப்படததால், அதில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானோர் இந்த சட்டத்தின்கீழ் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. யுஜிசி நெட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்த போதிலும், 2024 பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட வரம்பிற்குள் யுஜிசி-நெட் 2024 தேர்வு கொண்டு வரப்படவில்லை. இதனால் அதில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானோர் இந்த சட்டத்தின்கீழ் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

MUST READ