Homeசெய்திகள்இந்தியா"யோகா என்றால் ஒன்றுபடுவது"- பிரதமர் நரேந்திர மோடி உரை!

“யோகா என்றால் ஒன்றுபடுவது”- பிரதமர் நரேந்திர மோடி உரை!

-

- Advertisement -

 

"யோகா என்றால் ஒன்றுபடுவது"- பிரதமர் நரேந்திர மோடி உரை!
Photo: ANI

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தார். இந்த யோகா நிகழ்ச்சியில், ஐ.நா. உயரதிகாரிகள், தூதர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமலாக்கத்துறைக் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “யோகா என்றால் ஒன்றிணைவது; அனைவரும் ஒன்றிணைவது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு ஆகும். இந்தியாவின் பழமையான பாரம்பரியமான யோகா உலகளாவியது. ஒட்டுமொத்த உலகமும் யோகாவிற்காக, மீண்டும் ஒன்று கூடுவதைப் பார்ப்பது அபூர்வமானது. சிறு தானியங்கள் நமது உடலுக்கு மிகவும் நன்மைத் தரக்கூடியது. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம். எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இதைத் தொடர்ந்து, நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டனுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், புதிய தொழில்நுட்பம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கவுள்ளார். அத்துடன், அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த விருந்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

MUST READ