உத்தரபிரதேசத்தில் 38 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் சத்தார்பூரில் 38 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
குதிரை பூட்டிய சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைப்பு
அம்மாநில முதல்வரின் இலவச திருமண திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருமணம் நடைபெற்ற மேடைக்கு சாரட் வண்டியில் மாப்பிள்ளைகள் அழைத்து வரப்பட்டனர். குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் சாரை சாரையாக அவர்கள் வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தாலி காட்டிய போது பாரத மாதாவுக்கு ஜே என்று முழக்கம்
பின்னர் மண மேடையில் நடந்த விழாவில் மண மகள் கழுத்தில் மண மகன் தாலி காட்டினார். அப்போது பெற்றோர் பூக்கள் தூவி ஆசிர்வதித்தனர். வருகை தந்த பொது மக்கள் பாரத மாதாவுக்கு ஜே என்று குரல் எழுப்பினர்