Homeசெய்திகள்இந்தியாமத்திய பட்ஜெட் : எதன் விலை உயரும்! எதன் விலை குறையும்!

மத்திய பட்ஜெட் : எதன் விலை உயரும்! எதன் விலை குறையும்!

-

- Advertisement -

மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக புற்று நோய் மருந்துகள், மின்சார வாகனங்கள், தோல் பொருட்களின் விலைகள் குறைகின்றன. அதேவேளையில் வரி விலக்கு ரத்து காரணமாக சில பொருள்களின் விலை அதிகரிக்கவுள்ளன.

2025-26ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 37-க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,  புற்றுநோய் மற்றும் பிற அரிதான நோய்களுக்கான 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. செல்போன்கள் மற்றும் அதைச் சார்ந்த பிற பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கோபால்ட் பவுடர் மற்றும் கழிவு, லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், ஈயம், துத்தநாகம் போன்ற 12 முக்கியமான தாது பொருள்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்டுள்ள மூலதனப் பொருள்களில், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புக்கான 35 கூடுதல் பொருள்களும், மொபைல் போன் பேட்டரி தயாரிப்புக்கான 12 கூடுதல் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் தோல் ஜாக்கெட், ஷூக்கள், பெல்ட், பர்ஸ்கள் ஆகியவற்றின் விலை குறைகின்றன.மேலும், உறைந்த மீன் பேஸ்ட் தயாரிப்புக்கான உற்பத்தி மற்றும் அதன் மூலப்பொருள் ஏற்றுமதிக்கான சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் டிவிக்கள், போன்களுக்கான பேனல்கள் மீதான அடிப்படை சுங்க வரி
10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொலைக்காட்சி மற்றும் செல்போன்கள் விலையை பாதிக்கும். இதேபோல், செஸ் வரியின் கீழ் இருந்த 82 கட்டண வரிகளுக்கான விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

MUST READ