Homeசெய்திகள்இந்தியாமத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!

மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!

-

- Advertisement -
kadalkanni

 

"1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை"- ப.சிதம்பரம் ட்வீட்!
File Photo

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசிற்கு மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றும் உண்மையான நோக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட சில கால அளவிற்குள், அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நடப்பு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும் எனில், அது காங்கிரஸ் கட்சிக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த கட்சிகளுக்கும் மிகப்பெரிய வெற்றியாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்

இது தொடர்பாக, தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், இந்த மசோதாவை நிறைவேற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முக்கிய தலைவர் கே.கவிதாவின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

MUST READ