மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!
மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது? என்று குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, நடப்பாண்டு மார்ச் 31- ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இது கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1% ஆகும்.
கடந்த நிதியாண்டு இறுதியில் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 28% என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், மாநிலங்களுக்கான சிறப்பு உதவித்திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களுக்கு மூலதன செலவாகவும், முதலீட்டுக்காகவும் 84,883 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
அதில், இதுவரை 29,517 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021- 2022 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் மூலதன செலவீனம் 2.15% ஆக இருந்தது. இது 2022- 2023 ஆம் நிதியாண்டில் 2.7% ஆக அதிகரித்துள்ளது.
“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!
2025- 2026 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.5%- க்கு கீழ் உள்ள நிலையை அடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.