Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!

-

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!
Photo: ANI

மத்திய ஜவுளித்துறை, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை, வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று (ஜூன் 13) தனது மனைவியுடன் ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மத்திய அமைச்சருக்கு பொன்னாடைப் போர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து, ஏழுமலையானைத் தரிசித்த மத்திய அமைச்சருக்கு தேவஸ்தானம் சார்பில் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “எனது பிறந்தநாளில் இன்று திருப்பதி ஏழுமலையானைச் சந்தித்தது எனது அதிர்ஷடம். நாட்டிற்கு சேவை செய்வதில் எனது பணி வெற்றியடையட்டும்; இந்தியா முன்னேற்ற பாதையில் முன்னேறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ