Homeசெய்திகள்இந்தியாயுபிஐ-ல் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் - ஆர்பிஐ அறிவிப்பு..

யுபிஐ-ல் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் – ஆர்பிஐ அறிவிப்பு..

-

ஆர்பிஐ
UPI செயலிகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை ரூ. 5 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

டிசம்பர் மாதத்திற்கான நிதிக்கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்தவித மாற்றமுமின்றி 6.5% ஆக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஐ

அத்துடன், 2023 -24 ஆம் நிதியாண்டில் கடந்த ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதாகவும் ஆளுநர் சந்தி காந்த தாஸ் தெரிவித்தார். மேலும், மற்றொரு முக்கிய அறிவிப்பாக கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில குறிப்பிட்ட சேவைகளுக்கான பணப்பரிவத்தனை வரம்பையும் மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

அதன்படி மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஆன்லைன் மூலமாக தனிநபர் ஒருவர் ரூ. 5 லட்சம் வரை பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு யுபிஐ பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

MUST READ