Homeசெய்திகள்இந்தியாஉத்தரப்பிரதேச மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும்... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உத்தரப்பிரதேச மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும்… உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

-

உத்தரப்பிரதேச மாநில மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது மதரஸா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த வாரியம் மூலம் 13,364 பள்ளிகளில் 12 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மதராசா பள்ளிகள், மதரசா பள்ளி ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் உத்தரப்பிரதேச மாநில மதரசா பள்ளிகள் கல்வி வாரிய சட்டம் செல்லும் என்று தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.

மேலும், சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும், உத்தரபிரதேச மதரசா கல்விச்சட்டம் மதச்சார்பின்மைக் கொள்கையை மீறவில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், உத்தரபிரதேச மதரசா சட்டத்தின் செல்லுபடியை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

MUST READ