உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு
உத்தராகண்ட் மாநிலம் சாமோலியில் நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் இருந்த மின்மாற்றி திடீரென வெடித்தது. நமாமி கங்கை திட்டம் நடைபெறும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் 24 பேர் இருந்ததாகவும், மின்மாற்றி வெடித்ததில், 10 பேர் இறந்தனர். மேலும் மின்மாற்றி வெடித்து மின்சாரம் தாக்கியதில் பலர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த பலரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பேரழிவு ஏற்பட்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் சாமோலியில் இந்த பெரும் விபத்து நடந்துள்ளது குறிப்பிடதக்கது.